/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பித்தளை கேட் வால்வு திருடும் வாலிபரால் பரபரப்பு
/
பித்தளை கேட் வால்வு திருடும் வாலிபரால் பரபரப்பு
ADDED : பிப் 16, 2025 03:49 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், சில நாட்களாக குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள பித்தளை கேட் வால்வு, மீட்டர், குடிநீர் குழாய் உள்ளிட்டவை திருடு போய் வந்தது. இந்நி-லையில், நேற்று ராஜ்வீதி பகுதியில் குடிநீர் குழாயில் பொருத்தப்-பட்டிருந்த பித்தளை கேட் வால்வு, குடிநீர் மீட்டர் திருடு போனது.
இதையடுத்து அருகில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவில், 25 வயதுடைய டிப்டாப் வாலிபர் ஒருவர், தலையில் குல்லா அணிந்தபடி, கையில் டார்ச் லைட், ஸ்க்ரூ டிரைவருடன் வருகிறார். தொடர்ந்து, குடிநீர் குழாய் இருக்கும் இடத்திற்கு சென்று, பித்-தளை கேட் வால்வு, மீட்டரை கழற்றி திருடி செல்கிறார். இந்த வீடியோ, வாட்ஸாப்பில் பரவி, நேற்று பள்ளிப்பாளையம் பகு-தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

