/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
/
கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
ADDED : பிப் 06, 2024 10:34 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீரால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே, புள்ளாக்கவுண்டம்பட்டியில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி ஆற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு, குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய குழாய் அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்தது. தற்போது பணி நிறைவடைந்துள்ளது.
இதில், சேலம் - கோவை புறவழிச்சாலை, டீச்சர்ஸ் காலனி சர்வீஸ் சாலை
பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், சாலை சேறும், சகதியுமாக மாறி வருகிறது. மேம்பால பணிக்கு வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளதால், அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குழாயை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.