/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன், பணம் கொள்ளை
ADDED : பிப் 10, 2025 07:21 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சாணார்பாளையத்தை சேர்ந்தவர் தனபாலன், 50; பெங்களூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மேலாளர். இவரது மனைவி ராணி, நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, 8:00 மணிக்கு, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், தங்களின் வீட்டு கதவு திறந்து கிடப்பதாக, ராணிக்கும், தனபாலுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த இருவரும், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 9 பவுன் நகை, வெள்ளி, பணம் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.