/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்
/
தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 15, 2025 02:39 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சி சார்பில், தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். ஊர்வலம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் நிறைவடைந்தது.
பேரணியில் சென்றவர்கள், தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்திய படி சென்றனர். நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ரூபி போர்ஷியா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் வித்யாலட்சுமி, மோகனா, அரசு மருத்துவமனை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், கல்லுாரி மாணவ மாணவியர், சேவை சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.