ADDED : அக் 30, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
அருகே, கொக்கராயன்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், நேற்று கறவை
மாடு வளர்ப்புப் பயிற்சி முகாம் துவங்கியது. கொக்கராயன்பேட்டை,
பாப்பம்பாளையம், மற்றும் ஓடப்பள்ளி ஆகிய மூன்று பஞ்., பகுதிகளை
சேர்ந்த, 32 பேர் கலந்து
கொண்டனர்.
கடந்த, 20 ஆண்டுகளாக இயற்கை
முறையில் ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்கி
வரும், திண்டுக்கல்லை சேர்ந்த செந்தில்குமார், பயிற்சி முகாமில் கறவை
மாடு வளர்ப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் இயற்கை முறையில்
கால்நடைகளை வளர்ப்பது தொடர்பான நடைமுறை அறிவும், வழிகாட்டுதலும்
குறித்து பேசினார்.
