ADDED : ஆக 05, 2026 04:54 AM

அ நிறம் | அளவு
எருமப்பட்டி:அலங்காநத்தம் பகுதியில் பெய்த திடீர் மழையால், தயாரித்து காய வைத்திருந்த செங்கற்கள் நனைந்து விணாகின.
எருமப்பட்டி
யூனியன், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, பழையபாளையம்
உள்ளிட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த
சூளைகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு
தயாரிக்கும் செங்கற்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது.
இந்நிலையில்,
கடந்த, மூன்று மாதமாக இப்பகுதி யில் கடும் வெயில் கொளுத்தி வந்தது.
வழக்கம்போல் செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள், செங்கல் தயாரித்து
வெயிலில், நேற்று முன்தினம் காயவைத்திருந்தனர். ஆனால், மாலையில்
திடீரென பெய்த மழையால், செங்கற்கள் மழைநீரில் கரைந்து வீணாகின.
