/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு 2 வாரத்தில் ரூ.200 கோடி இழப்பு
/
கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு 2 வாரத்தில் ரூ.200 கோடி இழப்பு
கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு 2 வாரத்தில் ரூ.200 கோடி இழப்பு
கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு 2 வாரத்தில் ரூ.200 கோடி இழப்பு
ADDED : ஆக 12, 2024 07:01 AM
நாமக்கல்: பி.சி.சி., நிர்ணயம் செய்த விலையில் இருந்து, 24 ரூபாய் வரை குறைத்து கறிக்கோழியை கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு இரண்டு வாரத்தில், 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகளில் தினமும், 35 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) தினமும் நிர்ணயிக்கிறது. கடந்த, 1ல் கொள்முதல் விலை கிலோ, 95 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, 4ல், 98 ரூபாய், 5ல், 94 ரூபாய், 7ல், 75 ரூபாயாக விலை நிர்ணயம் செய்தனர்.
இதில், 7ம் தேதி ஒரே நாளில், 19 ரூபாய் சரிந்ததால், பண்ணையாளர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
தற்போது சீதோஷ்ண மாற்றம் காரணமாக, கோழி எடை அதிகரித்துள்ளது. வழக்கமாக, 42 நாளில், இரண்டு கிலோ எடை வரும் நிலையில், நாளில், 2.500, 2.600 கிலோ எடை அதிகரித்துள்ளது.அதனால் வாரம், 2.50 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், 3 கோடி கிலோ உற்பத்தியாகிறது.
மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், ஸ்ராவன் விரதத்தால் நுகர்வு சரிந்துள்ளது. இவற்றை பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகள், கொள்முதல் விலையில் இருந்து, 24 ரூபாய் வரை குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் இரண்டு வாரங்களில் பண்ணையாளர்களுக்கு, 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.