/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பைக்கு நடுவே உடைந்த குடிநீர் குழாய்
/
குப்பைக்கு நடுவே உடைந்த குடிநீர் குழாய்
ADDED : ஜன 08, 2026 04:51 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி பஞ்., பகுதிக்குட்-பட்ட அண்ணா நகரில், ராசிபுரம்- ஆர்.புதுப்பாளையம் நெடுஞ்-சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், சேரும் குப்பை-களை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்ப-குதி குப்பைமேடுபோல் காட்சியளிக்கிறது.
தற்போது, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முத்துக்காளிப்-பட்டி பகுதியில் இருந்து ஆர்.புதுப்பாளையம் பகுதிக்கு குடிநீர் குழாய் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன், அண்ணா நகர் பகு-தியில் உள்ள இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்று வருகிறது. அது மட்டுமின்றி குப்பை கழிவுக்கு நடுவே உடைந்துள்ளதால், கழிவுகள் புகுந்த தண்ணீர் துர்நாற்றம் வீசுகி-றது. எனவே, நோய் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால், குடிநீர் குழாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீர-மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

