/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற சகோதரர்கள் கைது
/
கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற சகோதரர்கள் கைது
ADDED : ஜூலை 11, 2025 01:48 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து, பரமத்தி நோக்கி இரு
சக்கர வாகனத்தில் வந்த இருவர், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். போலீசார் இருவரையும் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் எலச்சிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரிஷ், 24, பெயின்டர் என்பதும், மற்றொருவர் ஹரிஹரன், 19, என்பதும், இவர் கல்லுாரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் சகோதரர்கள் என தெரியவந்தது.
இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, மறைத்து வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை நல்லுார் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பரமத்தி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. சகோதரர்கள் இருவரையும் கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார்
பறிமுதல் செய்தனர்.