/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் விளக்கேற்றும் விழா

ADDED : பிப் 07, 2025 04:01 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, செங்குந்தர் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, விளக்-கேற்றும் விழா செங்குந்தர் கல்விக் குழுமத்தின் தலைவர் ஜான்சன் நடராஜன் தலைமையில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் நீலாவதி வரவேற்றார். தாளாளர் பாலதண்ட-பாணி, பொருளாளர் தனசேகரன், வேலைவாய்ப்பு இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவு-ரவ விருந்தினராக, கேர் 24 மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்-குனர் டாக்டர் கருப்பண்ணன், தலைமை விருந்தினராக நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி ஆகியோர் விளக்கேற்றும் நிகழ்வை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.விழாவில், மாணவர்களுக்கு மருத்துவமனை பயிற்சியின்போது, பயன்படுத்தக்கூடிய செய்முறை கருவிகள் பரிசாக வழங்கப்பட்-டது. பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.