/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பருத்தியில் மொட்டு உதிர்வு: தடுக்க யோசனை
/
பருத்தியில் மொட்டு உதிர்வு: தடுக்க யோசனை
ADDED : டிச 08, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பருத்தியில் மொட்டு
உதிர்வு: தடுக்க யோசனை
நாமகிரிப்பேட்டை, டிச. 8-
நாமகிரிப்பேட்டை வேளாண் இணை இயக்குனர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் பரவலாக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. பருத்தி மொட்டுகள் அதிகளவு கீழே கொட்டுகின்றன. இதை தடுக்க -பருத்தியில், 40 மில்லி நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். கரைசலை மொக்கு விடும் பருவத்தில் தெளிக்க வேண்டும். முதல்முறை தெளித்து ஒரு மாதம் கழித்தும், இரண்டாவது முறையாக, 19ம் நாள் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மொட்டுகள் உதிர்வது குறைக்கப்பட்டு காய்கள் அதிகம் பிடிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.