/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமை மாடு விஷம் வைத்து சாகடிப்பு
/
எருமை மாடு விஷம் வைத்து சாகடிப்பு
ADDED : ஜன 17, 2025 06:14 AM
ப.வேலுார்: காவிரி ஆற்றுக்கு மேய்ச்சலுக்கு சென்ற எருமைக்கு, மர்ம நபர்கள் விஷம் வைத்ததால் உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி குமார பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 32. இவர், 30 எருமைகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல், ப.வேலுார் காவிரி கரையோர எல்லைமேடு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு சென்றுள்ளார். மாலை, 4:00 மணிக்கு மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச் செல்ல வந்த போது ஒரு எருமை இறந்து கிடந்தது. அதன் அருகில் விஷம் கலந்த தண்ணீர் பாத்திரம் இருந்தது. மேலும் அதில் கலக்கப்பட்ட விஷ மருந்துதின் காலியான பாட்டில் அருகே கிடந்துள்ளது.
சக்திவேலை பார்த்ததும், அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். ப.வேலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எருமைக்கு விஷம் வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.