தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வி.ஏ.ஓ.,வை மிரட்டி பணம் கட்டட மேஸ்திரி கைது

வி.ஏ.ஓ.,வை மிரட்டி பணம் கட்டட மேஸ்திரி கைது

வி.ஏ.ஓ.,வை மிரட்டி பணம் கட்டட மேஸ்திரி கைது


ADDED : பிப் 03, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், கீரம்பூரை சேர்ந்தவர் சசிகலா, 29. கீழ்சாத்தம்பூரில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுகிறார். கடந்த, 29ல் அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஒருவர், லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் என அறிமுகம் செய்தார்.

வி.ஏ.ஓ.,வுக்கு லஞ்சம் வழங்கிய நபர் ஒருவர் புகார் அளித்துள்ளதாகவும், புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றால், 25,000 ரூபாயை தன் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் எனவும் மிரட்டினார்.

பயந்து போன வி.ஏ.ஓ., மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு, 25,000 ரூபாயை அனுப்பினார். அடுத்த சில நாட்களில் மேலும், 50,000 ரூபாய் தர வேண்டும் என அந்த நபர் மிரட்டியதால், நாமக்கல் போலீசில், சசிகலா புகார் அளித்தார்.

மொபைல் போன் எண்ணை வைத்து, அந்த மர்ம நபரை பிடித்தனர். அவர், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போகிநாயக்கனஹள்ளியை சேர்ந்த கட்டட மேஸ்திரி தியாகராஜன், 32, என்பது தெரிந்தது. அவரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us