/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பீரோவை திறந்து நகை, வாட்ச் திருட்டு
/
பீரோவை திறந்து நகை, வாட்ச் திருட்டு
ADDED : ஆக 13, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார், பள்ளி சாலையில் வசித்து வருபவர் வெற்றிச்-செல்வன், 48; கூலித்தொழிலாளி. இவர், குடியிருக்கும் வீட்டின் முன், வாசல்படி தளம் போடப்பட்டுள்ளது.
இதனால், வீட்டிற்கு வெளியே படுத்து துாங்கி உள்ளார். நேற்று காலை, 6:00 மணிக்கு வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து பீரோவில் பார்த்தபோது, உள் அறையில் வைக்கப்பட்டிருந்த, ஒரு பவுன் செயின், கோல்டு கலர் வாட்ச் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.