ADDED : ஆக 26, 2025 01:01 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, தெற்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம், 45; இவர், நேற்று காலை தன் டூவீலரில், தெற்குபாளையம் பகுதியில் ஈரோடு செல்லும் பிரதான சாலையை கடந்துள்ளார். அப்போது, சேலத்தில் இருந்து ஈரோட்டை நோக்கி சென்ற, 'இன்னோவா' கார், டூவீலர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது பின்னால் வந்த அரசு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், முன்னோக்கி சென்ற கார் மீது, ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதனால் காரின் முன், பின் பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில், டூவீலரில் வந்த தர்மலிங்கத்திற்கு, காரில் வந்த தர்ஷனுக்கும் பலத்த அடிபட்டது. அந்த வழியாக சென்றவர்கள், இருவரையும் மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.