/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ்-பார்சல் வேன் மோதல் டிரைவருக்கு ரூ.2,500 பைன்
/
பஸ்-பார்சல் வேன் மோதல் டிரைவருக்கு ரூ.2,500 பைன்
ADDED : அக் 11, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தில், நேற்று காலை, 9:30 மணிக்கு, திருச்செங்கோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற, எஸ்.என்.பி., தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்றது.
இதனால், சேலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி எதிரே சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் வேன் மீது மோதியது. பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த மல்லசமுத்திரம் போலீசார், அதிவேகமாக ஓட்டிச்சென்ற தனியார் பஸ் டிரைவர் நவீன்குமார், 27, என்பவருக்கு, 2,500 ரூபாய் அபராதம் விதித்து, அறிவுரை வழங்கினர்.
.