ADDED : ஆக 13, 2025 07:19 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், தாசநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு சர்வீஸ் சாலையோரம் ஏராளமான பயணியர் காத்திருந்து, பஸ், ஆட்டோவில் ஏறி செல்கின்றனர்.
ஆனால் போதிய இட வசதியின்றி, வெயில், மழை காலங்களில் பயணியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்கூடம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
