/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விளம்பர போர்டை அகற்ற வணிகர்களுக்கு வேண்டுகோள்
/
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விளம்பர போர்டை அகற்ற வணிகர்களுக்கு வேண்டுகோள்
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விளம்பர போர்டை அகற்ற வணிகர்களுக்கு வேண்டுகோள்
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விளம்பர போர்டை அகற்ற வணிகர்களுக்கு வேண்டுகோள்
ADDED : செப் 09, 2024 06:51 AM
நாமக்கல்: 'வணிகர்கள், நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பெயர் பலகை மற்றும் விளம்பர போர்டுகளை, தாமாக முன்வந்து உடனடியாக அகற்றி, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் வர்த்தக நிறுவனத்தினர், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து, தங்களது பெயர் பலகை, விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர். அதனால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. மேலும், போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்பட்டு, அப்பகுதியை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், போலீசார், போக்குவரத்து துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தும், தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அரங்கேற்றப்படுகிறது. இந்நிலையில், அவ்வாறான பெயர் பலகை, விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் நகர போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை: வளாகங்கள், நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முன்னால், பாதசாரிகளின் நடைபாதையை வழிமறித்து வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர போர்டுகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அவ்வாறு அகற்றாத நிலையில் மாநகராட்சி அதிகாரிகளின் உதவியோடு அவை அப்புறப்படுத்தப்படும். கடை உரிமையாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என, நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் எச்சரித்துள்ளார். அதனால், வணிகர்கள் நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பெயர் பலகை மற்றும் விளம்பர போர்டுகளை, தாமாக முன்வந்து உடனடியாக அகற்றி, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.