ADDED : பிப் 27, 2026 06:34 AM
திருச்செங்கோடு; திருச்செங்கோட்டில், ரூ. 63 கோடியே 23 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும், 12 கி.மீ., நீள-முள்ள இரண்டாம் கட்ட புறவழிச் சாலையை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராமசாலைகள் அலகு சார்பில், 2023--24ல் விரிவான சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், திருச்செங்கோடு நக-ருக்கு முதல் கட்டமாக 6 கி.மீ., 200 மீட்டர் நீள-முள்ள சாலையும், இரண்டாம் கட்டமாக, 12 கி.மீ., 800 மீட்டர் நீளமுள்ள புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.இரண்டாம் கட்ட சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் சாலையை பொது-மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். திருச்-செங்கோட்டில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், பெயர் பலகையை முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி திறந்து வைத்தார். விழாவில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் சேலம் கண்காணிப்பு பொறி-யாளர் சரவணன், கோட்ட பொறியாளர் அகிலா, திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் பூங்கொடி மற்றும் தி.மு.க., - கொ.ம.தே.க.,, கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
