/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 08, 2024 03:52 AM
நாமக்கல்: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்க, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது, 1995 முதல் வழங்கப்பட்டு வருகி-றது. இந்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்க, கலெக்டர் உமா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு, 5,00,000 ரூபாய் விருது தொகையும், ஒரு சவரன் தங்க பதக்-கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர், முதல்-வரால் தேர்வு செய்யப்படுகிறார். 2024ம் ஆண்டிற்கான தமிழக அரசின், 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்குவ-தற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்-படுகின்றன. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்-களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம்.
தங்களது விண்ணப்பம், சுயவிபரம், முழு முகவரி, தொலை-பேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விபரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2024ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்-கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள், டிச., 20 ஆகும்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்-ணப்பிக்க விரும்புவோர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவ-லக வளாகத்தில், 2ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்-பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அறை எண், 28ல் உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.