ADDED : ஏப் 20, 2026 05:38 AM

குமாரபாளையம்:தமிழகத்தில்
சட்டசபை தேர்தல், வரும், 23ல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதற்காக,
வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள்
என பலரும் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்து
வருகின்றன்.
இந்நிலையில், குமாரபாளையம் நகர பகுதிகளில்
நகர்மன்ற தலைவர் விஜயகண்ணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக
முற்போக்கு கூட்டணியின், தி.மு.க., வேட்பாளர் பாலு வீதி வீதியாக தன்
ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து வருகிறார்.
அப்போது, தமிழக
முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின்,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வேடங்களில் மேடை நாடக
நடிகர்களை அழைத்து வந்து பிரசாரம் செய்தனர்.
அப்போது, மக்கள் தலைவர்களை நேரில் கண்டதுபோல் கையசைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
