/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாக தேர்வு: 117 மாணவர்களுக்கு வேலை

ADDED : ஜன 18, 2025 01:44 AM
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாக தேர்வு: 117 மாணவர்களுக்கு வேலை
ராசிபரம்,:சென்னையை சேர்ந்த கார் உதிரிபாக நிறுவனமான பிரேக்ஸ் இந்தியா, ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வளாகத்தேர்வு நடத்தியது. பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் கிளை துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேலாளர் பழனி, பாலம்பாக்கம் கிளை மேலாளர் ஸ்ரீதரன், சோளிங்கநல்லுார் கிளை மேலாளர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு நடந்தது. இறுதியில், 117 மாணவகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முத்தாயம்மாள் அறக்கட்டளை தாளாளர் பிரேம்குமார் தலைமை வகித்து, மாணவர்ளுக்கு பணிநியமன ஆணை வழங்கினார். பிரேக்ஸ் இந்தியா நிறுவன அதிகாரிகள் பேசுகையில், 'கடந்த, 41 ஆண்டுகளாக இக்கல்லுாரி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நாங்கள் தொடர்ந்து, 25 ஆண்டுகளாக மாணவர்களை பணி நியமனம் செய்து வருகிறோம்' என்றனர். கல்லுாரி செயலாளர் ஜோதிமணி ராமசாமி, பொருளாளர் சர்வேஸ்வரி, முதல்வர்கள் விஜயகுமார், சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.