/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோர கிணற்று பகுதியில் பாதுகாப்பு சுவர் அமைக்கலாமே
/
சாலையோர கிணற்று பகுதியில் பாதுகாப்பு சுவர் அமைக்கலாமே
சாலையோர கிணற்று பகுதியில் பாதுகாப்பு சுவர் அமைக்கலாமே
சாலையோர கிணற்று பகுதியில் பாதுகாப்பு சுவர் அமைக்கலாமே
ADDED : அக் 31, 2025 12:45 AM
பள்ளிப்பாளையம், பழைய சின்னாகவுண்டம்பாளையம் பகுதியில், சாலையோரம் திறந்தவெளியில் உள்ள கிணற்று பகுதியில், பாதுகாப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பழைய சின்னாகவுண்டம்பாளையம்  பகுதியில் சாலையோர கிணறு உள்ளது. இந்த சாலை வழியாக கார், டூவீலர், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை சென்று வருகின்றன.
சாலையோரத்தில், கிணறு உள்ள பகுதியில் தடுப்பு சுவர் இல்லாமல், திறந்தவெளியாக உள்ளதால், விபத்து ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது.
பகல் நேரத்தில் வரும் போது, கிணறு உள்ளது தெரியும். இரவு நேரங்களில் வரும்போது, மிகவும் கவனமுடன் வரவேண்டும். இல்லையெனில் கிணற்றில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே கிணறு உள்ள பகுதியில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க என, பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

