ADDED : ஜூன் 29, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, குட்டைமுக்கு பகுதியில் செயல்படும், 'மனித நேயம்' அறக்கட்டளை சார்பில், புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம், நேற்று நடந்தது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
மேலும், மருத்துவ ஆலேசானை வழங்கினர். இந்த பரிசோதனை முகாமில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அறக்கட்டளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.