/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மெழுகுவர்த்தி ஏந்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
மெழுகுவர்த்தி ஏந்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 15, 2024 06:54 AM
மல்லசமுத்திரம்: மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவில் மருத்துவ மாணவியை, கும்பலாக சேர்ந்து பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று, மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட, வையப்பமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சாந்தி, செயலாளர் மோகனப்பிரியா, மாவட்டக்குழு உறுப்பினர் செல்லம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.