/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார் மோதி விபத்து: 4 மின் கம்பம் சேதம்
/
கார் மோதி விபத்து: 4 மின் கம்பம் சேதம்
ADDED : மே 13, 2025 02:16 AM
எருமப்பட்டி :எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் நோக்கி, நேற்று மதியம் சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது. இந்த கார், அலங்காநத்தம் பிரிவு அருகே சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது.
இதில் நிலை தடுமாறிய கார், அருகில் இருந்த மின் கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் அருகில் இருந்த, நான்கு மின் கம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து கிழே சரிந்தது. இதையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.பின், அங்கு வந்த மின்வாரிய பணியாளர்களிடம், உடைந்த மின் கம்பங்களுக்கு தேவையாக பணம் கொடுப்பதாக கார் உரிமையாளர் ஒப்புக்கொண்டர். இதனால், அலங்காநத்தம் பிரிவு பகுதியில் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது.