/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார்
/
சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார்
ADDED : ஆக 10, 2025 12:53 AM
பள்ளிப்பாளையம், சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சக்தி வேல், 28; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று மதியம், பள்ளிப்பாளையத்தில் இருந்து வெப்படை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஈ-காட்டூர் பகுதியில் வரும்போது, கார் நிலை தடுமாறி சாலையின் மையப்பகுதியில் இருந்த சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரின் முன் பக்கம் பலத்த சேதமடைந்து, தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள், உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து காருக்குள் சிக்கி தவித்த சக்திவேலை மீட்டனர். அவருக்கு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

