/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மீது கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்
/
டூவீலர் மீது கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 04, 2025 01:28 AM
குமாரபாளையம், குமாரபாளையம் பழைய தபால் நிலையம் அருகே வசிப்பவர் கலைச்செல்வன், 28; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு, 'பேஷன் புரோ' டூவீலரில், பி.வி.சி., பைப் கட்டிக்கொண்டு, சேலம்-கோவை புறவழிச்சாலையில், டீச்சர்ஸ் காலனி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு பின்னால் வந்த, 'சுவிப்ட் டிசைர்' கார், டூவீலர் மீது மோதியது. நிலைதடுமாறிய டூவீலர், முன்னால் சென்று கொண்டிருந்த, 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலர் மீது மோதியது.
இந்த விபத்தில் டூவீலர்களில் சென்ற பூபதி, 46, தினேஷ்குமார், 18, மற்றும் கலைச்செல்வன் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகார்படி, விபத்துக்கு காரணமான, விருதாச்சலத்தை சேர்ந்த ராகுல்சர்மா, 25, என்பவரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.