/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை பள்ளத்தில் பாய்ந்த கார்
/
கொல்லிமலை பள்ளத்தில் பாய்ந்த கார்
ADDED : ஜூன் 25, 2025 01:26 AM
சேந்தமங்கலம், கொல்லிமலையில், ஒருவார காலமாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மலைப்பாதையில் உள்ள, 40வது கொண்டை ஊசி வளைவில் இருந்து, 70வது கொண்டை ஊசி வளைவு வரை கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் பகுதியை சேர்ந்த, இரண்டு குழந்தைகள் உட்பட, ஆறு பேர் ஒரு காரில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கொண்டை ஊசி வளைவு பகுதியில் இறங்கிக்
கொண்டிருந்தனர்.
அப்போது, 48வது கொண்டை ஊசி வளைவில் இருந்த பள்ளத்தில் கார் பாய்ந்து, மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, ஆறு பேரும் காயமின்றி உயிர் தப்பினர். பின், நடந்தபடி அடுத்த கொண்டை ஊசி வளைவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். நேற்று காலை, கிரேன் மூலம் பள்ளத்தில் பாய்ந்த காரை மீட்டனர்.