நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்:பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் அதற்கு துணை போன பாகிஸ்தானை கண்டித்து, தாரமங்கலம் அண்ணாசிலை பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தால் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஹரிராமன் உட்பட, 80 ஆண்கள், 10 பெண்கள் என, 90 பேர் மீது தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.