/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டலில் ரகளையில் 3 பேர் மீது வழக்கு
/
ஓட்டலில் ரகளையில் 3 பேர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2025 01:10 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பொன்னையன் மகன் சிவா, 53; மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். அவரது கடைக்கு எதிரே, துறையூரை சேர்ந்த நவீன், 25, ஓட்டல் நடத்தி வருகிறார்.
சிவாவின் கடையில் பணிபுரிந்த இருவரை, அதிக சம்பளம் தருவதாக கூறி, நவீன் தன் கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.
மூன்றாவதாக ஒருவரை நவீன் அவரது கடைக்கு அழைத்தபோது, சிவா தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நவீன், தன் ஆதரவாளர்கள் இருவருடன் சேர்ந்து, கடந்த, 28 இரவு, 10:00 மணிக்கு, சிவாவிடம் தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகார்படி, தலைமறைவாக உள்ள நவீன் மற்றும் அவரது ஆதரவாளர்களை மல்லசமுத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

