sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடியரசு தின விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

/

குடியரசு தின விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

குடியரசு தின விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

குடியரசு தின விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு


ADDED : ஜன 27, 2025 03:15 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முத்து தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களால், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்-காத நிறுவனங்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்-டாயம் அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளர்கள் பணிபு-ரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்ப-டுவதாக நிர்வாகத்தால் படிவம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய பகுதி-களில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதி-களின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 22 கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 17 நிறுவனங்களிலும், 39 உணவகங்களில் ஆய்வு செய்ததில், 33 உணவகங்களிலும், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஒரு நிறுவனத்திலும் என மொத்தம், 65 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 51 நிறுவனங்களில் பணிபு-ரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க, 24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமர்ப்-பிக்கப்படாததும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் நலத்து-றையால் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்-ளது.






      Dinamalar
      Follow us