/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடையூறு செய்ததாக பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
/
இடையூறு செய்ததாக பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஆக 24, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை மயான சுவற்றில், இரண்டு ஹிந்து மத தெய்வங்கள் படத்தை ஒட்டி, பா.ஜ., மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் உள்ளிட்ட சிலர், சுவாமிக்கு வழிபாடு நடத்தினர்.
இந்த இடத்தில் பொதுமக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், வக்கீல் தங்கவேல் மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சொக்கலிங்கம், குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

