/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொத்து தகராறில் அண்ணன் காதை கடித்த தம்பி மீது வழக்கு
/
சொத்து தகராறில் அண்ணன் காதை கடித்த தம்பி மீது வழக்கு
சொத்து தகராறில் அண்ணன் காதை கடித்த தம்பி மீது வழக்கு
சொத்து தகராறில் அண்ணன் காதை கடித்த தம்பி மீது வழக்கு
ADDED : ஆக 29, 2025 01:40 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, சொத்து தகராறில் அண்ணன் காதை கடித்த தம்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பாகவுண்டம்புதுாரை சேர்ந்தவர் செங்க மலை, 55, கூலி தொழிலாளி. திருமணமாகாததால் தனியாக வசித்து வருகிறார். இவரது தம்பி ஆறுமுகம், 50. இவர்களுக்கு பரம்பரை சொத்தாக, 3 ஏக்கர் நிலம் உள்ளது. செங்கமலை விவசாய நிலத்தை ஆறுமுகம் கேட்டுள்ளார். திருமணம் ஆகவில்லையே உனக்கு வர வேண்டிய நிலத்தை எனது பெயரில் எழுதி வை என தொடர்ந்து செங்கம்மலையை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு செங்கமலை மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் நிலத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பதில் சொல்லிவிட்டு, திரும்பி சென்ற செங்கமலையின் காதை, ஆறுமுகம் கடித்துள்ளார். வலியால் துடித்த செங்கமலையைை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து செங்கமலை கொடுத்த புகார்படி, மங்களபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

