/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
/
மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
ADDED : செப் 22, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்:சேந்தமங்கலம் அருகே, திருமலைப்பட்டி காந்தி தோட்டத்தில் வசிப்பவர் ராணி, 32; இவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். ஜோதிக்கும், பாலப்பட்டியை சேர்ந்த சின்ராசு என்பவருக்கும், இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக, ஜோதி தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை, சின்ராசு திருமலைப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, மாமியார் ராணியை தாக்கியுள்ளார். அவர் அளித்த புகார்படி, சின்ராசு மீது வழக்குப்பதிந்து புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.