/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு
/
திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு
திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு
திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு
ADDED : டிச 26, 2024 01:20 AM
நாமக்கல், டிச. 26-
கன்னியாகுமரியில், 133 அடி உயர திருவள்ளுவர் உருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாக, நாமக்கல் மாவட்ட மைய நுாலகத்தில், நேற்று கலெக்டர் உமா திருக்குறள் குறித்த ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் திருக்குறள் தொடர்பான ஓவியங்கள், வண்ண புகைப்படங்கள், புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓவிய கண்காட்சி அமைக்க உறுதுணையாகவும், மாவட்ட மைய நுாலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை வரைந்ததற்காகவும் அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியர்கள், மாணவர்களை கலெக்டர் வாழ்த்தி பாராட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''26, 27, 29 ஆகிய, 3 நாட்கள் திருக்குறள் கருத்தரங்கம்; 28ல் திருக்குறள் வினாடி - வினா போட்டி; 30ல், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது. 31ல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், 23 முதல் டிச., 31 வரை நடத்தப்பட உள்ள பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 3,000, மூன்றாம் பரிசாக, 2,000 ரூபாய் ரொக்கப் பரிசும், போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது,'' என்றார்.
மாவட்ட நுாலக அலுவலர் தேன்மொழி, மாவட்ட மைய நுாலக தலைவர் தில்லை சிவக்குமார், முதல் நிலை நுாலகர் சக்திவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.