/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அறுவடை முடியும் தருணத்தில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
/
அறுவடை முடியும் தருணத்தில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
அறுவடை முடியும் தருணத்தில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
அறுவடை முடியும் தருணத்தில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
ADDED : மே 15, 2025 01:59 AM
ஈரோடு :குச்சிக்கிழங்கு எனப்படும் மரவள்ளி கிழங்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அதிகமாகவும், டெல்டா மாவட்டங்களில் குறைவாகவும் சாகுபடியாகிறது. குறைவான தண்ணீரில், அதிக மகசூல் தருவதால் மானாவாரி பகுதி, ஆயக்கட்டு பாசனம் இல்லாத இடங்களில் இதனை அதிகமாக சாகுபடி செய்வர். நடப்பாண்டு ஒரு டன், 6,500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது அறுவடை சீசன் நிறைவடையும் நிலையில் டன், 5,300 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: சீசன் நிறைவடையும்போது, மரவள்ளி கிழங்குக்கு விலை அதிகமாக கிடைக்கும். உணவு, சிப்ஸ் போன்றவை பயன்படுத்தவும், ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உற்பத்தி, மருத்துவ பயன்பாட்டுக்கு இதனை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். மரவள்ளி நடவு வயல்களில், 'சேகோ' ஆலை நிர்வாகம், மொத்தமாக பேசி அறுவடை செய்து செல்வர்.
ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், நவ., முதல் மார்ச் வரை சீசன் காலமாகும். சீசன் நேரத்தில் ஒரு டன் மரவள்ளி, 6,500 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, 5,300 முதல், 5,400 ரூபாய்க்கே விற்பனையாகிறது. 'சேகோ' ஆலைகள், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை உயரவிடாமல் தடுக்கின்றனர். இதற்காக கடந்த, இரு மாதங்களுக்கு முன் சேலம் கலெக்டர் தலைமையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில், கூடுதல் விலைக்கு வியாபாரிகள் ஒப்பு கொண்டும் பயனில்லை.
நேற்றைய நிலையில், 90 கிலோ எடை கொண்ட ஸ்டார்ச் மாவு, 2,500 ரூபாய், 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி, 3,300 ரூபாய்க்கு விலை போனது. கடந்த சில மாதங்களுக்கு முன், 90 கிலோ ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு ஆகியவை, 5,700 ரூபாய் வரை விற்பனையானது. கள்ளக்
குறிச்சி, கல்வராயன் மலைப்பகுதி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் அடுத்த மாதம் அறுவடை சீசன் துவங்கும். அப்போது மரவள்ளி வரத்து அதிகரித்தால், மேலும் விலை குறையும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். இதுபற்றி அரசு ஆய்வு செய்து, மரவள்ளிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும். மரவள்ளி, ஜவ்வரிசி போன்றவற்றை அரசே கொள்முதல் செய்தால், விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கும்.
இவ்வாறு கூறினார்.