ADDED : அக் 01, 2026 02:51 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் உள்ள உணவு வணிகர்களுக்கான அடிப்படை கேட்டரிங் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், உணவு சேவை நிறுவனங்களுக்கான சிறப்பு ஆய்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குமாரபா-ளையம்,
பள்ளிப்பாளையம் பகுதிகளில் உள்ள உணவு வணிகர்க-ளுக்கான அடிப்படை கேட்டரிங் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.பள்ளிப்பாளையம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்க-நாதன், குமாரபாளையம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். முகாமில், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த உணவகங்கள், பேக்கரிகள், சிற்றுண்டி சாலைகள் மற்றும் சாலையோர உணவு விற்பனையாளர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முகாமில், சமையலறை மற்றும் உணவு சேமிக்கும் பகுதியை துாய்மையாக பராமரிக்க வேண்டும். மேலங்கி, கையுறை, தலைக்-கவசம், முகக்கவசம் அணிவது கட்டாயம் என, அறிவுரை வழங்-கப்பட்டது.
