/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று மாட்டு பொங்கலையொட்டி கால்நடை கயிறு விற்பனை ஜோர்
/
இன்று மாட்டு பொங்கலையொட்டி கால்நடை கயிறு விற்பனை ஜோர்
இன்று மாட்டு பொங்கலையொட்டி கால்நடை கயிறு விற்பனை ஜோர்
இன்று மாட்டு பொங்கலையொட்டி கால்நடை கயிறு விற்பனை ஜோர்
ADDED : ஜன 16, 2024 10:52 AM
பள்ளிப்பாளையம்: மாட்டு பொங்கலையொட்டி, நேற்று, கால்நடைகளுக்கு தேவையான கயிறு விற்பனை ஜோராக நடந்தது.
தை இரண்டாம் நாளான இன்று, மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, கழுத்தில் மணி, கலர் கயிறு கட்டி, மாலை அணிவித்து அலங்காரம் செய்து, வயல்களில் பொங்கல் வைத்து, இறைவனுக்கு படையலிட்டு, கால்நடைகளை வணங்குவது வழக்கம். இது
நகர்புறத்தை விட கிராமப்புறத்தில் மிக விமரிசையாக நடக்கும்.
இதையொட்டி, பள்ளிப்பாளையம் அடுத்த சில்லாங்காடு பகுதியில் கால்நடைகளுக்கு தேவையான கலர் கயிறுகள், அலங்கார பொருட்கள், சங்கு, சலங்கை, சங்கிலி, மூக்கணாங்கயிறு, நெற்றி கயிறு, வளையம், கலர் கயிறு, அலங்கார பொருட்கள், வர்ணம் போன்றவை விற்பனை செய்யும் கடைகளை புதிதாக அமைத்துள்ளனர். இன்று மாட்டு பொங்கல் என்பதால், நேற்று, இப்பகுதியில் கால்நடைகளுக்கு தேவையான கலர் கயிறு உள்ளிட்ட பொருட்கள் ஜோராக
நடந்தது.