ADDED : நவ 19, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், நவ. 19-
தேசிய மாணவர் படை தினம், ஆண்டுதோறும் நவ., நான்காவது வாரம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். இதையொட்டி, ஈரோடு, 15வது தமிழ்நாடு பட்டாலியன் சார்பில், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகே உள்ள காவிரி கரையோர பகுதிகளை, தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் சுத்தம் செய்தனர்.
ஈரோடு, 15வது தமிழ்நாடு பட்டாலியனின் கமாண்டிங் ஆபீஸர் கர்னல் அஜய் குட்டினோ, சுபேதார் சுரேஷ் சந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில், குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ., சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.