ADDED : செப் 27, 2026 06:43 AM
எருமப்பட்டி:எருமப்பட்டியில் பெயின்டரை கொலை செய்த வழக்கில், தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி
மாவட்டம், முருங்கை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 45, பெயின்டர். இவர்,
நேற்று முன்தினம் இரவு எருமப்பட்டி 5 ரோட்டில் உள்ள மதுபான கடையில்,
மது குடித்து கொண்டிருந்த போது, கல்லால் அடித்து கொலை
செய்யப்பட்டார். இது குறித்து, எருமப்பட்டி போலீசார் விசாரித்து
வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் எருமப்பட்டி காலனி பகுதியை
சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்யும் தொழிலாளி தம்பிதுரைக்கு, 29,
தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார்
கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணையின்போது, தம்பிதுரை கூறியதாவது:
ராமசாமி
வீடுகளில் பெயின்டிங் வேலை செய்யும் போது, நான் சென்ட்ரிங் வேலை செய்து
வந்தேன். இருவரும் நண்பர்களாக பழகி, அடிக்கடி மது குடிப்போம். நேற்று
முன்தினம் நாங்கள் இருவரும் மது குடித்த போது, அவர் மது பாட்டிலை
தள்ளிவிட்டார். இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், இருவரும் தள்ளி விட்டு கொண்டிருந்த போது, நான் அருகில்
இருந்த கல்லால் தாக்கி விட்டு சென்று விட்டேன். அவர் இறந்து போவார் என
எனக்கு தெரியாது. இவ்வாறு கூறினார்.
