ADDED : ஜூன் 10, 2026 03:25 AM
மல்லசமுத்திரம்:சேலம்
மாவட்டம், ஓமலுார் ரங்கனுார் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன்
ராஜேந்திரன், 37; சென்டரிங் தொழிலாளி. கடந்த, 7ல் பள்ளிப்பாளையம்
அருகே, ஐந்துபனை பகுதியில் உள்ள அக்கா மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு
சென்றுவிட்டு, 'ஸ்பிளண்டர் புரோ' டூவீலரில் வீடு திரும்புக்கொண்டிருந்தார்.
மோர்பாளையம்,
விவேகானந்தா தனியார் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே
வந்த சரக்கு வேன் மோதியதில் துாக்கி வீசப்பட்டு, தலைக்கவசம்
அணியாததால் தலையில் பலத்த அடிபட்டது.
சேலம் அரசு
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த
நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு உயிரிழந்தார்.
மல்லசமுத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து, நேற்று சரக்கு வேன்
டிரைவர், மல்லசமுத்திரம் வெங்கடேச
புரியை சேர்ந்த டிரைவர் செந்தில்ராஜாவை கைது செய்தனர்.
