ADDED : நவ 07, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய மகேஸ்வரி, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாறுதல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, சென்னை வடக்கு மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) பணியாற்றி வந்த எழிலரசி, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவண்ணாமலை மற்றும் சென்னை பகுதிகளில் 36 ஆண்டுகள் ஆசிரியர், தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் நிலையில் பணியாற்றி உள்ளார். புதிய முதன்மை கல்வி அலுவலருக்கு, அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

