/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய் அலுவலர் மீது சேர்மன் குற்றச்சாட்டு
/
வருவாய் அலுவலர் மீது சேர்மன் குற்றச்சாட்டு
ADDED : ஆக 27, 2025 01:28 AM
ராசிபுரம், ராசிபுரம் நகராட்சி நகர்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் கவிதா தலைமை வகித்தார். கமிஷனர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்களது வார்டு பிரச்னைகளை கூறினர். பல கவுன்சிலர்கள் தங்களது தெருக்களில் நாய் தொல்லை அதிகம் உள்ளது. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி சாக்கடை பிரச்னை, முட்புதர்களை அகற்ற வேண்டும். தெரு விளக்கு அமைத்தல், ரேஷன் கடை அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அதை தொடர்ந்து, சேர்மன் கவிதா பேசுகையில், ''ராசிபுரம் நகராட்சிக்கு போதுமான வருவாய் வருவதில்லை. முக்கியமாக வருவாய் அலுவலர் சீனிவாசன் சரியாக பணியாற்றுவதில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது,'' என, குற்றம் சாட்டினார். இதை கேட்ட கவுன்சிலர்கள், வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.