/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் இன்று முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
/
மாவட்டத்தில் இன்று முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
ADDED : ஆக 13, 2025 07:17 AM
மக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல் 17 வரை, தொடர்ந்து, 5 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, மூன்று நாட்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இதனால் பகல், இரவு நேர வெப்பநிலை குறைந்துள்ளது. இன்று முதல் வரும், 17 வரை, அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 30 முதல் 32 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்சம், இரவு நேர வெப்பநிலை, 22 முதல் 24 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
காற்றின் ஈரப்பதம், 50 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் மேற்கு, வடமேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 8 முதல், 10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இன்று, 6 மி.மீ., 14ல், 2 மி.மீ., 15ல், 3 மி.மீ., 16ல், 2 மி.மீ., 17ல், 2 மி.மீ., அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.