/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சந்து பொங்கல் விழா: தீர்த்தக்குட ஊர்வலம்
/
சந்து பொங்கல் விழா: தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஜன 17, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் அருகே உள்ள அனைத்து பகுதிகளிலும், பொதுமக்கள் பூரண நலத்துடன் வாழவும், பிள்ளைகள் நிறைந்த கல்வி, செல்வம் பெற்றிடவும், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், தொழில் வளம், விவசாய வளம் செழிக்கவும் மார்கழி மாதத்தில் சந்து பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம்.
தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதி சந்து பொங்கல் விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.