/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் தேர்தல் சோதனை சாவடி மாற்றம்
/
பள்ளிப்பாளையத்தில் தேர்தல் சோதனை சாவடி மாற்றம்
ADDED : மார் 28, 2024 06:35 AM
பள்ளிப்பாளையம் : நாமக்கல் மாவட்ட எல்லையாக, பள்ளிப்பாளையம் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தை கடந்தால், ஈரோடு மாவட்ட எல்லை வந்து விடும். பள்ளிப்பாளையம் ஆற்றுப்பாலம் பகுதியில், கடந்த, 17ல் தேர்தல் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இதில், எஸ்.ஐ., மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக இந்த சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் கூறியதாவது: ஈரோடு மாவட்ட பகுதியில், ஆற்றுப்பாலம் அருகே சோதனைச்சாவடி உள்ளது. அங்கு வாகன சோதனை செய்யப்பட்ட பின், 100 மீட்டர் துாரத்தில் உள்ள பள்ளிப்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டத்திற்குள் வாகனங்கள் நுழைகின்றன. இதனால் இங்கு சோதனைச்சாவடி தேவையில்லை. இதற்கு பதிலாக, நாமக்கல் - சேலம் மாவட்ட எல்லையான பால்மடையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

