/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
/
மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
ADDED : ஏப் 30, 2025 01:10 AM
ப.வேலுார்:
ப.வேலுார் அருகே, பொத்தனுாரில் பிரசித்தி பெற்ற சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த, 13ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் அம்மன் திருவீதி உலா நடந்தது. 27ல் வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது.
இரவு, குதிரையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, அம்மன் திருத்தேரில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை, அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை, கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.