ADDED : மே 09, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் பிடாரியம்மன் கோவில் பண்டிகையையொட்டி, கடந்த, 3ல் கம்பம் நடப்பட்டு திருவிழா துவங்கியது.
இதை தொடர்ந்து, நேற்று பிடாரியம்மன் தேரில் எழுந்தருளி சிறப்பு பூஜை நடந்தது. பின், தேர் ஊர்வலமாக இழுத்து வரப்பட்டது. தொடர்ந்து நடந்த மாவிளக்கு பூஜையில் பெண்கள், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.