/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதா என ஆய்வு
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதா என ஆய்வு
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதா என ஆய்வு
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதா என ஆய்வு
ADDED : அக் 25, 2024 01:09 AM
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை
வழங்கப்பட்டதா என ஆய்வு
பள்ளிப்பாளையம், அக். 25-
பள்ளிப்பாளையம், ஆலாம்பாளையம் பகுதியில், அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அட்டை முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா என, முன்னாள் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.
பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றியம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில், அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு, நிர்வாகிகள் கடந்த மாதம் உறுப்பினர் அட்டை வழங்கினர். இந்த அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதா என, நேற்று மாநில பேரவை துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பிரபு, ஒவ்வொரு வீதியாக சென்று, அ.தி.மு.க., உறுப்பினரை சந்தித்து உறுப்பினர் அட்டை வந்துள்ளதா என, ஆய்வு செய்தார்.
பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை, ஒன்றிய கவுன்சிலர் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

